சாதாரண டி.வி களை ஸ்மார்ட் டிவிகளாக மாற்றும் குரோம் காஸ்ட்-2

ஸ்மார்ட் டிவிகளில் வைஃபை வசதி அதிலேயே அடங்கியுள்ளது. இருப்பினும் வைஃபை வசதி இல்லாத எல்இடி, எல்சிடி டிவிகளை ஸ்மார்ட் டிவிகளாக மாற்றும் வகையில் குரோம் காஸ்ட் - 2 வந்துள்ளது. 
சாதாரண டி.வி களை ஸ்மார்ட் டிவிகளாக மாற்றும் குரோம் காஸ்ட்-2

சினிமா, தொலைக்காட்சித் தொடர், விளையாட்டு, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் அதிக தரமாக காண்பதற்கென்றே நெட்பிளிக்ஸ், யூ டியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்ட்ரீம் இணையச் சேவை அளிக்கிறது. 

இவ்வாறு அதிக தரத்திலான இதுபோன்ற காட்சிகளை நாம் செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப்களில் சிறிய திரையிலேயே காண வேண்டியுள்ளது. எனவே இணையம் வழியாக இக்காட்சிகளை அகன்ற டி.வி. திரையில் காண்பதற்காகவே குரோம் காஸ்ட்-2 என்ற புதிய கருவியைக் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். ஏற்கெனவே குரோம் காஸ்ட்-1 என்ற கருவியை கடந்த 2013 இல் வெளியிட்டது கூகுள் நிறுவனம். அதிலுள்ள குறைபாடுகளை நீக்கி தற்போது புதிதாக மீண்டும் இக்கருவியை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.

பென்டிரைவ் போன்ற இந்த கையடக்கக் கருவியை தொலைக்காட்சியில் இணைப்பதன் மூலம், செல்போன், கணனி, லேப்டாப்களில் உள்ள இணைய வசதியை வைஃபை மூலமாக தொலைக்காட்சித் திரையில் காணலாம். இதன் விலை ரூ. 3,339 என நிர்ணயித்துள்ளது இந்நிறுவனம்.

தற்போது விற்பனைக்கு வந்துள்ள ஸ்மார்ட் டிவிகளில் வைஃபை வசதி அதிலேயே அடங்கியுள்ளது. இருப்பினும் வைஃபை வசதி இல்லாத எல்இடி, எல்சிடி டிவிகளை ஸ்மார்ட் டிவிகளாக மாற்றும் வகையில் வந்துள்ள இக்கருவி, மக்களிடையே வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com